நடிகர் சூர்யாவின் லேட்டஸ்ட்டான புகைப்படம் இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகில் பிரபல முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மொத்தம் பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் தீவிரமாக உருவாகி வரும் இப்படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் சூர்யாவின் வொர்க் அவுட் வீடியோவை தொடர்ந்து அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யா மும்பையில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்திருக்கிறார். இதனை பேஸ்புக் பக்கத்தில் “இன்று காலை சூரியன் உதயம் விசேஷமாக இருந்தது. உங்களை சந்தித்தது அற்புதமாக இருந்தது சூர்யா சிவகுமார், மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று சச்சின் டெண்டுல்கர் புகைப்படத்துடன் பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.