YouTube video

Actor Suriya  in Web Series Title : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா சிவகுமார். இவரது நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சூர்யா தயாரித்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் பக்கா கிராமத்து கதையில் ஒரு படம் என அடுத்தடுத்து நடிக்க உள்ளார்.

தற்போது பரவி வரும் கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது படத்தின் படப்பிடிப்புகள் தொடங்காமல் இருந்து வருகிறது. இதனால் சூர்யா வெப்சீரிஸ் தொடர் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேச்சுவார்த்தைகள் சக்ஸஸ், மீண்டும் துப்பறிவாளன் 2 இயக்குனர் மாற்றம்? – வெளியான அதிரடி தகவல்கள்!

மொத்தம் ஒன்பது எபிசோடுகள் ஆக இந்த வெப்சீரிஸ் தொடர் வெளியாக உள்ளது. ஒவ்வொரு எபிசோடையும் ஒவ்வொரு இயக்குனர்கள் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு எபிசோடை இயக்குனர் மணிரத்னம் இயக்க உள்ளார்.

அதேபோல் இந்த வெப் சீரிஸ் எபிசோடுகளில் ஒவ்வொன்றை அரவிந்த்சாமி, சித்தார்த் ஆகியோர்களும் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 9 இயக்குனர்கள் இந்த வெப்சீரிஸ் தொடரை இயக்க இருப்பதால் இதற்கு நவரசா என டைட்டில் வைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சூர்யா நடிக்க உள்ள பகுதியை ஜெயாந்திர பஞ்சாபிகேஷன் என்பவர் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் சித்தார்த் ப்ரியா ஆனந்த் நித்யா மேனன் ஆகியோர் நடித்த 180 என்ற படத்தை இயக்கியவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.