சூர்யா 42 டைட்டில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் கங்குவா.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சிறுத்தை சிவா இயக்கத்தில் 3டி தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இந்த படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் டைட்டில் கங்குவா என டைட்டில் டீசர் வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோ தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வரும் நிலையில் கங்குவா என்ற வார்த்தைக்கான அர்த்தம் குறித்த தகவல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளது.

ஆமாம் கங்குவா என்றால் நெருப்பு பவர் கொண்ட நபர் என்பது தான் அர்த்தம். இதனால் இந்த படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு வானளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது.