நடிகர் சூர்யா பிரபல மலையாள நடிகரான பிரித்விராஜுடன் எடுத்துக் கொண்ட எக்ஸ்க்ளூசிவ் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மொத்தம் பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். ஏற்கனவே இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இந்த படத்தின் பீரியட் காட்சிகள் அடுத்த மாதம் படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யாவின் எஸ்கிளூசிவ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் சூர்யா பிரபல முன்னணி மலையாள நடிகரான பிரித்விராஜுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இதனை ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.