தளபதி 67 திரைப்படம் குறித்து நடிகர் சந்தீப் கிஷன் பகிர்ந்து இருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தீப் கிஷன். இவரது நடிப்பில் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி மைக்கேல் திரைப்படம் வெளியாக உள்ளது. இவர் தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானார்.

பயங்கரமாக இருக்கும் தளபதி 67 ப்ரோமோ!!… நடிகர் சந்தீப் கிஷன் பேட்டி வைரல்.!

தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வரும் இவர் அண்மையில் மைக்கேல் படத்திற்கான பிரமோஷனில் கலந்து கொண்டிருந்தார். அப்போது பேட்டியில் தளபதி 67 திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் அவர், T67 திரைப்படம் நம் இண்டஸ்ட்ரிக்கு பெருமை சேர்க்கும் ஒரு படமாக இருக்கும், T67 தளபதி விஜய் ரசிகர்கள் அல்லது லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் மீது மோகம் கொண்ட படம் அல்ல, இது ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியும் எதிர்பார்க்கிறது என்று கூறியுள்ளார்.

பயங்கரமாக இருக்கும் தளபதி 67 ப்ரோமோ!!… நடிகர் சந்தீப் கிஷன் பேட்டி வைரல்.!

மேலும் தளபதி 67 திரைப்படத்தின் ப்ரோமோ விக்ரம் திரைப்படம் போல் பண்ணி இருக்காங்கன்னு கேள்விப்பட்டோம் ப்ரோமோ எப்படி இருக்கு என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, சந்தீப் கிஷன் பயங்கரமா இருக்கு, பயங்கரமா இருக்கு, பயங்கரமா இருக்கு, என ஒரே வார்த்தையில் பதில் அளித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார். இவரது இந்த சுவாரசியமான தகவல்கள் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்ததோடு மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.