Actor Sundeep Kishan Eye Brow Dance to Vaathi Coming
Actor Sundeep Kishan Eye Brow Dance to Vaathi Coming

வாத்தி கம்மிங் பாட்டுக்கு ஐ ப்ரோ டான்ஸ் ஆடி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் முன்னணி நடிகர் ஒருவர்.

Actor Sundeep Kishan Eye Brow Dance to Vaathi Coming : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை விஜய்யின் உறவினரான பிரிட்டோ தயாரித்துள்ளார்.

விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா ஆகியோர் நெகட்டிவ் ரோலில் நடிக்க மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், விஜயின் நண்பர் சஞ்சீவ், மகேந்திரன், நடிகர் பிரேம், ரம்யா, ஆஹா கல்யாணம் பவி டீச்சர் என இன்னும் பலர் இணைந்து நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய ஏ ரத்னகுமார் திரைக்கதை அமைத்துள்ளார்.

சிம்பு மட்டும் அந்த படத்தில் நடித்திருந்தால் வேற லெவலுக்கு போயிருப்பார் – ஆனால் கோட்டை விட்டுட்டாரு!

முற்றிலும் மாறுபட்ட கதை களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். இப்படத்தில் இருந்து வெளியான வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

பிரபலங்கள் பலரும் இப்பாடலுக்கு டிக் டாக் செய்து அந்த வீடியோக்களை வெளியிட தினம் தினம் பல வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன.

ஆனால் தற்போது பிரபல நடிகர் இப்பாடலுக்கு செய்துள்ள சாகசம் ஒன்று ரசிகர்கள் பலரையும் வியக்க வைத்துள்ளது.

ஆம், தெலுங்கு நடிகரான சுதீப் கிஷன் இப்பாடலுக்கு புருவத்தை உயர்த்தி டான்ஸ் ஆடியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

இதோ வீடியோவை பார்த்து உங்களோட கமெண்ட்டை சொல்லுங்க