Bigg Boss Vs Sun Tv
Bigg Boss Vs Sun Tv

பிக் பாஸில் முதல் சீசனின் முதல் நாளே ஓட்டம் பிடித்தவருக்கு மீண்டும் 4-வது சீசனில் வாய்ப்பு அளிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actor Sri Again in Bigg Boss4 Tamil : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி இதுவரை 3 சீசன்களை நிறைவு செய்துள்ளது. அக்டோபர் நான்காம் தேதி முதல் நான்காவது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

100 நாட்கள் 16 பிரபலங்கள் என நடைமுறையில் இருந்து வந்த பிக்பாஸ் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 80 நாட்கள் 12 பிரபலங்கள் என மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

பிக்பாஸ் சீசன் 4 ல் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையா?? வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்.!!

இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்வார்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் சில பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.

இந்த நிலையில் 12 போட்டியாளர்களில் ஒருவராக முதல் சீசனில் பங்கேற்று முதல் நாளே வீட்டை விட்டு வெளியேறிய நடிகர் ஸ்ரீ பங்கேற்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

முதல் சீசனில் கலந்து கொண்ட இவர் உடல் நலக் குறைபாடு காரணமாக முதல் நாளே வீட்டை விட்டு வெளியேறினார்.

இவர் தமிழில் மாநகரம் மற்றும் வழக்கு எண் 18/ 9 ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.