Actor Soori With TN Police
Actor Soori With TN Police

கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காக்கும் காவல் துறையினருக்கு நன்றி சொல்ல நடிகர் சூரி இன்று திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.

Actor Soori With TN Police : “கொரோனா வைரஸ் பரவலால் உலகமே பயந்து கொண்டிருக்கும் இந்த வேலையில்,கொரோனா வைரஸ் பரவலிலிருந்து நமது உயிரைப் பாதுகாக்கும் விதிமுறைகளைத் தினந்தோறும் கூறி மக்களை காப்பதில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் காவல் துறையினர்.

தங்களது உயிரையும் பெரிதென்று எண்ணாமல், இரவு பகல் பாராமல், 24 மணி நேரமும் நமது உயிர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வழி நடத்திய அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள். எங்கள் ஊரில் அய்யனார் சாமி தான் எல்லை சாமி, அது போல் தற்போது காவல் துறையினர் நாம் எல்லோருக்கும் எல்லை சாமி போல் இருந்து நம்மைக் காத்து வருகின்றனர்.

தங்களது உயிரையும் பெரிதென்று எண்ணாமல், இரவு பகல் பாராமல்,24 மணி நேரமும் நமது உயிர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வழி நடத்திய அவர்களுக்குகோடி கோடி நன்றிகள். எங்கள் ஊரில் அய்யனார் சாமி தான் எல்லை சாமி, அது போல் காக்கி சட்டை போட்ட எல்லைசாமிபோல் தற்போது காவல் துறையினர் நம்மைக் காத்து வருகின்றனர்.

கடவுளை அன்றாடம் வணங்கும் நாம் அனைவரும், சமீப காலங்களாக காவல் துறையினையறையும் வணங்க ஆரம்பித்து விட்டோம்.

ஆனால் இந்த கொரோனாவை காவல் துறை நண்பர்களையும் விட்டு வைக்கவில்லை. இது வரை 60 காவல் துறையினர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறியுள்ளனர். அவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன்.

சினிமாவில் தான் நாங்கள் கதாநாயகர்கள், ஆனால் நிஜத்தில் காவல் துறையினர், மருத்துவர்கள், தீயனைப்பு வீரர்கள், செவிலியர்கள் தூய்மை பணியாளர்கள், பத்திரிக்கை நண்பர்கள் ஆகிய நீங்கள் தான் உண்மையான கதாநாயகர்கள். எனவே நிஜ கதாநாயகர்களான இவர்களைச் சந்தித்து நன்றி கூறி, அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கியதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இந்த நாள் என் வாழ் நாளில் மிக முக்கியமான நாளாக நினைக்கிறேன். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு என்றென்றும் எனது மனதில் நிலைத்திருக்கும்.

நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்போம், நம்மை பாதுகாப்பவர்களுக்கு துணை நிற்போம்” என்று நடிகர் சூரி கூறினார்.