Actor Soori Takes Corona Vaccine

மனைவியுடன் சேர்ந்து கொரானா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார் நடிகர் சூரி.

Actor Soori Takes Corona Vaccine : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்திலும் இந்த வைரஸால் நாளுக்கு நாள் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் இந்த வைரஸ் தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நாள் திரையுலகப் பிரபலங்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தாங்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். ‌‌‌‌‌

அந்த வகையில் தற்போது நடிகர் சூரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் சேர்ந்து கொரானா தடுப்பூசி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.