நடிகர் சூரியின் லேட்டஸ்ட் இன்டர்வியூ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி காமெடி நட்சத்திரமாக வலம் வருபவர் சூரி. இவர் தற்போது கதாநாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விடுதலை திரைப்படத்தின் பாகம் ஒன்றில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் வரும் 31ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் கலந்து கொண்ட சூரி பகிர்ந்திருக்கும் சுவாரஸ்யமான தகவல்கள் வைரலாகி வருகிறது. அதில் அவர், தான் விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதை அறிந்ததும் நடிகர் ரஜினிகாந்த் தனக்கு வாழ்த்து தெரிவித்தார், அப்போது தான் அடைந்த மகிழ்ச்சி அளவற்றது என கூறியிருக்கிறார். மேலும் வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்தை தொடர்ந்து தான் தற்போது வினோத் ராஜ், விக்ரம் சுகுமாரன், அமீர் உள்ளிட்ட 3 இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக கம்மிட்டாகி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.