ரசிகரின் அம்மாவை நலம் விசாரிக்க சென்ற சூரியின் வீடியோ வைரலாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் சூரி. முதலில் நகைச்சுவை நடிகராக கலக்கி வந்த இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான விடுதலை திரைப்படம் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் சீரியஸான ரோலில் நடித்து அசதி இருந்த இவர் இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.

இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து நடிகர் சூரி தற்போது விடுதலை 2, கொட்டுக்காளி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் அமீர் இயக்கத்தில் ஒரு படத்திலும், எதிர்நீச்சல் பட இயக்குனர் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நாயகனாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இப்படி பிசியான ஹீரோவாக மாறி இருக்கும் சூரி தற்போது மதுரையை சேர்ந்த தனது ரசிகர் ஒருவரின் வீட்டுக்கு ஆட்டோவில் எளிமையாக சென்று அவர் தாயாரின் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றிருக்கும் வீடியோ அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. மேலும் அந்த வீடியோவில் நடிகர் சூரி ரசிகரின் தாயாரிடம் “என் அன்பு தம்பிகள். என்னை அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். என் பெயரை சொல்லி பல உதவிகள் செய்கிறார்கள். என்னால் எதுவும் இல்லை. என் ரசிகரின் அம்மாவை என் அம்மாவாக பார்க்க வந்திருக்கிறேன் இதுவே எனக்கு பெருமை” எனக்கூறி மகிழ்ச்சி படுத்தியுள்ளார் . இதன் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வைரலாகி விடுகிறது.