சுற்றுலா தளத்தில் சாகச பயணம் செய்த சூரியின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் சூரி. முதலில் நகைச்சுவை நடிகராக கலக்கி வந்த இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான விடுதலை திரைப்படம் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் சீரியஸான ரோலில் நடித்து அசதி இருந்த இவர் இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.

இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து நடிகர் சூரி தற்போது விடுதலை 2, கொட்டுக்காளி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் அமீர் இயக்கத்தில் ஒரு படத்திலும், எதிர்நீச்சல் பட இயக்குனர் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நாயகனாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இப்படி பிசியான நடிகராக மாறி இருக்கும் சூரி தற்போது இலங்கைக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு அவர் பிரபலமான சிப் லைனில் சாகச பயணமும் தைரியமாக மேற்கொண்டு இருக்கிறார். அதன் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் சூரி அதில் “உங்களின் தன்னம்பிக்கை, துணிச்சல், உழைப்பு – இவற்றை பொறுத்தே உங்கள் மகிழ்ச்சி” என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டு இருக்கிறார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.