actor somu in munthirikaadu
actor somu in munthirikaadu

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் முந்திரிக்காடு இயக்குனர் திரு மு களஞ்சியம் அவர்கள் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சீமான் அவர்கள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த முந்திரி தோட்ட விவசாயிகள் சம்பந்தப்பட்ட கதை இது.

அதாவது இதில் இரண்டு பிரிவினர் காதலித்ததால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி கூறியிருக்கிறார்கள். மேலும் இரு சாதி பிரிவினருக்கு இடையே ஏற்படும் ஒரு பிரச்சனை தான் இந்த படத்தின் மையக்கரு.

இந்த படத்தில் கதாநாயகன் கதாநாயகி அனைவரும் சிறப்பாக நடித்திருந்தாலும் பால்ராசு எனப்படும் ஒரு முக்கிய கதாபாத்திரம் தான் கதையையே தாங்கி பிடிக்கிறது. ஆரம்பத்தில் மிகவும் சாதி வெறி கொண்ட ஒரு நபராய் வலம் வரும் பால்ராசு படத்தின் இறுதியில் மனம் திருந்தி சாதியை தூக்கி தூர எறிந்து கதாநாயகன் மற்றும் கதாநாயகியின் காதலுக்கு உதவி செய்து அவர்களை சேர்த்து வைக்கிறார்.

சாதி வெறி கொண்ட ஒரு இளைஞன் இறுதியில் மனம் மாறி சாதிக்கு எதிராக நிற்பது மக்களின் மனதை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த கதாபாத்திரத்தை நடிகர் சோமு அவர்கள் நடித்துள்ளார். இவர் இந்த படத்தில் முதல் பாதியில் வில்லனாகவும் படத்தின் இறுதி கிளைமாக்ஸ் காட்சியில் இரண்டாவது கதாநாயகன் போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

இவர் வில்லனாக வரும் கொடூர காட்சிகளிலும் நல்லவனாக வரும் சண்டை காட்சிகளிலும் தன்னுடைய நடிப்புத் திறமையை அபாரமாக வெளிப்படுத்தியுள்ளார். நன்கு கற்றுத் தேர்ந்த ஒரு நடிகனைப் போல் டயலாக் டெலிவரி மற்றும் தன்னுடைய பாடி லாங்குவேஜ் மற்றும் முக பாவனைகள் என அனைத்திலும் இவர் தன்னை ஒரு சிறந்த நடிகர் என்று நிரூபித்துள்ளார். நடிகர் சோமு அவர்கள் இதற்கு முன்பு வெற்றிமாறன் இயக்கிய வட சென்னை, பா ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடிகர் விஷால் நடித்த வீரமே வாகை சூடும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றும் நடித்துள்ளார். மேலும் இவர் விஷால் நடித்த லத்தி படத்திலும் சிறிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார். இவர் ஆரம்ப காலங்களில் நாளைய இயக்குனர் நடத்திய குறும்பட போட்டிகளிலும் பங்கேற்று சிறந்த நடிகர் பரிசை வென்றுள்ளார்.

மேலும் 6 அத்தியாயம் என்று வெளியான அந்தாலஜி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சோமுவை பற்றி விசாரிக்கும் பொழுது அவர் அடிப்படையில் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் என்பது தெரிய வந்தது. இவர் சென்னையில் ஒரு முன்னணி சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் கம்பெனியில் ஐடி பணியில் வேலை செய்து வருகிறார். சினிமாவின் மீதும் நடிப்பின் மீதும் உள்ள அளவுக்கதிகமான காதலினால் அவர் நடிப்புத் துறையை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

நடிப்புக்காக அவர் சண்டைக் காட்சிகள் மற்றும் குதிரை ஏற்றம் மற்றும் நீச்சல் அனைத்தையும் பழகி உள்ளார். என்னதான் ஐ டி நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்தாலும் அவர் சினிமா தான் தன் கனவு சினிமா தான் தன் உலகம் நான் என்றாவது ஒருநாள் சினிமாவில் ஜெயித்தே தீருவேன் என்று சினிமாவில் காலடியை எடுத்து வைத்துள்ளார். அவரின் கனவுக்கு ஏற்ப முந்திரிக்காடு அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.

சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டும் வேண்டும் தன் நடிப்பு திறமையை நன்றாக வெளிப்படுத்தி தான் ஒரு சிறந்த நடிகன் என்ற பெயர் வாங்க வேண்டும் என்பதே சோமுவின் கனவாக உள்ளது. முந்திரி காட்டில் தன் நடிப்பு திறமையை அபாரமாக வெளிப்படுத்திய சோமு அவர்களுக்கு மென்மேலும் பட வாய்ப்புகள் அமையும் என்று நாம் வாழ்த்துகிறோம். மேலும் தமிழ் திரையுலகில் தமிழ் வில்லன்களுக்கு மிகவும் தட்டுப்பாடு உள்ளது. அந்த இடத்தை விரைவில் சோமு நிரப்புவார் என்று நம்புகிறோம்.