Actor Sivakumar Affected by COVID19

சூர்யா, கார்த்தியின் தந்தை மற்றும் நடிகரான சிவக்குமாருக்கு கொரானா ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Actor Sivakumar Affected by COVID19 : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திலும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.

ஏழை பணக்காரர் இருப்பவர் இல்லாதவர் என்று அனைவருமே இந்த வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. தமிழ் திரையுலகைச் சார்ந்த விஷால், தமன்னா, நிக்கி கல்ராணி போன்ற பிரபலங்களும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இவர்களைத் தொடர்ந்து தற்போது சூர்யா கார்த்தி ஆகியோரின் தந்தையும் நடிகருமான சிவக்குமாருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவருக்கு அறிகுறிகள் இல்லாத கொரானா தொற்று இருப்பதாகவும் இதனால் அவர் தியாகராய நகரில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதனால் சிவகுமர் அவர்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பூரண குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய தொடங்கியுள்ளனர்.