நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தின் பிரமோஷன் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

டான் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் மற்றும் வெளிநாட்டு நடிகை மரியா ரியான்ஷாப்கா ஆகியோர் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் 21ஆம் தேதி அனைத்து திரையரங்குகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதால் இப்படத்திற்கான பிரமோஷன் பணிகள் இரு மொழியிலும் நடைபெற்று வருகிறது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரின்ஸ் ப்ரோமோஷன்!!… வெளியான வைரல் போட்டோஸ் இதோ!.

அந்த வகையில் இப்படத்திற்கான பிரமோஷன் தமிழகத்தை தொடர்ந்து தற்போது தெலுங்கில் பிரமோட் செய்ய இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரின்ஸ் திரைப்படத்தின் படக்குழுவினருடன் பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவர் கொண்டாவும் கலந்து கொண்டிருக்கிறார். தற்போது இந்நிகழ்ச்சியில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரின்ஸ் ப்ரோமோஷன்!!… வெளியான வைரல் போட்டோஸ் இதோ!.
ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரின்ஸ் ப்ரோமோஷன்!!… வெளியான வைரல் போட்டோஸ் இதோ!.