நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆரத்தியுடன் சிறு வயதில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அத்துடன் இணைந்து வரும் தீபாவளி பண்டிகைக்கு அயலான் திரைப்படமும் வெளிவர இருக்கிறது.

இப்படங்களை தொடர்ந்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் SK21 என தற்காலிகமாக பெயரிட்டு இருக்கும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படி வெள்ளி திரையில் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் சிறு வயது புகைப்படம் ஒன்று சோசியல் மீடியா பக்கங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

அப்புகைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறுவயதில் தனது மனைவி ஆரத்தியுடன் இருக்கிறார். அதில் அடையாளமே தெரியாமல் இருக்கும் சிவகார்த்திகேயனை கண்டு ரசிகர்கள் சிவகார்த்திகேயனா இது என்ற ஆச்சரியத்துடன் புகைப்படத்தை ரசித்து வைரலாக்கி வருகின்றனர்.