Sivakarthikeyan Adopted White Tiger

Actor Sivakarthikeyan Adopted White Tiger At Vandalur Zoo

சிவகார்த்திகேயன் செய்த மாஸான செயல் – பாராட்டிய பிரபலங்கள்..!

YouTube video

தமிழ் சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக தடம் பதித்து இருப்பவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் மெரினா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், ரெமோ என தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வந்த நிலையில் ஹீரோ மற்றும் மிஸ்டர் லோக்கல், சீமராஜா ஆகிய படங்கள் கொஞ்சம் சறுக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

சிவகார்த்திகேயன் தான் நடிக்கணும் என அடம்பிடித்த தனுஷ் – எதிர்நீச்சல் படம் பற்றிய ரகசியத்தை உடைத்த இயக்குனர்.!

இருப்பினும் சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தின் மூலமாக விட்ட இடத்தை மீண்டும் எட்டிப் பிடித்தார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற சமூக சிந்தனையுள்ள சிறந்த படங்களை தயாரித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் கொரானா நிவாரண நிதி, பெப்சி ஊழியர்களுக்கு உதவி என அவசர காலங்களில் மக்களுக்கு தேவையான உதவிகளையும் தவறாமல் செய்து வருகிறார்.

மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள அணு என்ற வெள்ளை புள்ளியை கடந்த 2018-ம் ஆண்டு முதல் தத்து எடுத்து அதற்கு தேவையான உதவிகளை செய்து வந்தார்.

நோட் பண்ணிக்கோங்க.. மாஸ்டர் டிரைலர் ரிலீஸ் ஆனா இதுதான் இந்திய அளவில் ட்ரெண்டிங்கா இருக்கும் – மாஸ் டயலாக் சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

தற்போது அந்த கால அளவு முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் மேலும் நான்கு மாதங்களுக்கு அணுவை அவரே தத்தெடுத்து கொள்வதாக கூறியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக டாக்டர் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலிப் குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்சன் திலிப்குமார் நயன்தாராவை வைத்து இயக்கியிருந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தில் எனக்கு இப்ப கல்யாண வயசு தான் வந்துருச்சுடி என்ற பாடலைப் சிவகார்த்திகேயன் தான் எழுதி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.