சிம்பு தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இது மட்டும் இல்லாமல் கமல்ஹாசன் நடிக்கும் “தக் லைஃப்”படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அடுத்ததாக சிம்புவின் 49வது படத்தை இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் நடிக்கப் போவதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு மற்றும் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாக வாய்ப்புள்ளது.
மேலும் சிம்புவின் 50ஆவது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
எனவே சிம்பு நடிப்பில் அடித்தடுத்து வெளியாக போகும் படங்களால் ரசிகர்கள் உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.