லண்டனில் ரசிகர்களுடன் நடிகர் சிம்பு இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் சிம்பு 10 தல திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக இருக்கும் STR48 என்ன தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பினை படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இப்படம் தொடர்பான அப்டேட்கள் பல அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தற்போது பயிற்சிக்காக லண்டன் சென்று இருக்கும் நடிகர் சிம்புவின் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள் சில நேற்றைய தினம் வெளியாகி வைரலானதை தொடர்ந்து தற்போது லண்டனில் உள்ள ரசிகர்களுடன் நடிகர் சிம்பு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகிய வைரலாகி வருகிறது.