Actor Simbu Photos

செம ஸ்லிம்மா ஸ்டைலிஷான கெட்டப்பில் சிம்புவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Actor Simbu Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக ஈஸ்வரன் மற்றும் மாநாடு என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை பொங்கல் திரு நாளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

மேலும் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படியான நிலையில் தற்போது சிம்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரலாறை அழியுங்கள் ரெக்கார்டை எழுதுங்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ள டி ஷர்ட் அணிந்து உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களிலும் சிம்பு செம ஸ்லிம்மாக ஸ்மார்ட்டாக இருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.