நடிகர் சிம்பு லேட்டஸ்டாக கமலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகிய ட்ரெண்டிங்காகி வருகிறது.

கோலிவுட்டில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக அறிமுகமாகி தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. ஏராளமான ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்து தல’ திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்.டி.ஆர். 48’ என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்க உள்ளனர்.

இப்படம் தொடர்பான பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வரும் நிலையில் கமலுடன் சிம்பு மற்றும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து ட்ரெண்டிங்காகி வருகிறது.