நடிகர் சிம்பு உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை வீல் சேரில் அமர வைத்து தள்ளி சென்று உள்ளார் வெங்கட் பிரபு.

Actor Simbu in Hospital Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வந்த வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சமீபத்தில் தான் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்றார்.

ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு : 24-ந்தேதிவரை வைபவம்..

இந்த நிலையில் நடிகர் சிம்பு மருத்துவமனையில் இருந்தபோது அவரை வீல் சேரில் அமர வைத்து வெங்கட்பிரபு தள்ளிச் சென்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அசுரன் படத்தில் இதெல்லாம் இருந்ததா? – Producer K Rajan Bold Speech | Labour Movie Trailer Launch