இந்தியன் 2 திரைப்படம் குறித்து நடிகர் சித்தார்த் அளித்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சித்தார்த். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அனைவருக்கும் பரிச்சயமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இவரது நடிப்பில் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் டக்கர் திரைப்படம் வரும் ஜூன் 9 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் படம் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்ததை தொடர்ந்து இப்படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்று நடிகர் சித்தார்த் இந்தியன் 2 திரைப்படம் குறித்து அளித்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. அதில் அவர், இந்தியாவின் மிகப்பெரிய படங்களில் ஒன்று இந்தியன் 2. என்னுடைய இரண்டு குருக்கள் சங்கர் & கமல்ஹாசன் சார் இந்த படத்தில் இருக்கிறார்கள். அவர்களுடன் நான் நடிக்க வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவுகளில் ஒன்றாகும். இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும். நான் படத்தைப் பற்றி பேச ஆரம்பித்தால், அதைப் பற்றி இரண்டு மாதங்கள் வரை பேசுவேன் எனக் கூறியிருக்கிறார்.