ட்விட்டரில் இருந்து விலகியதற்கான காரணத்தை நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சித்தார்த். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அனைவருக்கும் பரிச்சயமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் டக்கர் திரைப்படம் வரும் ஜூன் 9 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் படம் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்ததை தொடர்ந்து இப்படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சித்தார்த் டுவிட்டரில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறியுள்ளார் அது தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், “சமூக சேவகன் என்பது வேடிக்கையான வார்த்தை ஆனால், நான் எப்போதும் உண்மையை பேசியுள்ளேன். ஒரு நடிகனாக நான் இதை வருடம் முழுவதும் செய்கிறேன். ஆனால், என் உடன் பணியாற்றும் எந்த நடிகரும் நடிகையும் யாரும் இதை செய்வதில்லை. உலகத்தில் உள்ள அனைத்து கொடுமைகளுக்கும் எதிராக குரல் கொடுக்க நான் சூப்பர் ஹீரோ இல்லை. அது எனக்கு பிடிக்கவும் இல்லை.

என் மீது கோடி கணக்கில் பல இயக்குனர்கள் முதலீடு செய்கிறார்கள் அவர்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்க நினைக்கிறேன். ‘இவர் உண்மையைப் பேசுபவர்’ என்று மக்களுக்கு என்னை அறிமுகம் செய்துவிட்டேன். இனி ‘இவர்தான் சிறந்த நடிகர்’ என்று அறிமுகம் செய்ய ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.