நடிகர் சாந்தனுவின் வாழ்த்து பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சாந்தனு. இவரது நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘இராவண கோட்டம்’ திரைப்படம் இன்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி உள்ளது. பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இன்று இப்படத்துடன் இணைந்து வெளியான மற்ற படங்களுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சாந்தனும் வெளியிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

அதில் அவர், அனைவருக்கும் நிறைய அன்பு. கடின உழைப்பு அனைத்தும் வெற்றி அடையட்டும் எனக் குறிப்பிட்டு இராவண கோட்டம் படத்துடன் வெளியான ஃபர்ஹானா, கஸ்டடி, குட் நைட் ஆகிய படங்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.