Actor Shaam Arrested in Chennai
Actor Shaam Arrested in Chennai

நடு இரவில் சென்னையில் உள்ள வீட்டில் நடிகர் ஷாம் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Actor Shaam Arrested in Chennai : தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தவர்களில் ஒருவர் நடிகர் ஷாம்.

இவரது நடிப்பில் இதுவரை பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. சில படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது உண்டு. அதிலும் குறிப்பாக உள்ளம் கேட்குமே, ஆறு மெழுகுவர்த்திகள் ஆகிய திரைப்படங்களை பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். மேலும் இவர் உள்ளம் கேட்குமே படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கலாம் என முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

தூக்கலான கவர்ச்சியில், நடு காட்டில் மீரா மிதுன் செய்த வேலை – சர்ச்சை வீடியோ.!

இந்த நிலையில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடியதாக நடு இரவில் கைது செய்யப்பட்டு அதன் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் நடிகர் ஷாம் உடன் சேர்த்து அவரது நண்பர்கள் 13 பேர் மீதும் வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.