கவுண்டமணியுடன் சேர்ந்து நடிப்பது குறித்து பேசியுள்ளார் செந்தில்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அனைவரது மனதையும் கவர்ந்தவர் செந்தில். கவுண்டமணியும் இவரும் இணைந்து நடித்த காமெடிகள் அனைத்துமே பயங்கர ஹிட் கொடுத்தது.
ஆனால் சிறிது காலம் இருவரும் தனித்தனியாக நடித்து வந்தனர். பிறகு சினிமாவில் இருந்து சிறிது விடை பெற்று மீண்டும் இருவரும் கம்பேக் கொடுத்துள்ளனர். இவர்களுடைய காம்பினேஷன் பிடிக்காத ரசிகர்களே கிடையாது.
அப்படி இருக்கையில் சமீபத்தில் செந்திலிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கவுண்டமணியுடன் இணைந்து நடிப்பீர்களா? என்ற கேள்வியை கேட்டுள்ளார்.
அதற்கு பதில் அளித்த செந்தில், வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதிலால் மீண்டும் இவர்களது காம்பினேஷனில் வரும் காமெடிகளை ரசிக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.