Actor Sathish Tweet About BB : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Bigg Boss 3 Tamil
இது பிக் பாஸ் வீடா? இல்ல அந்த அம்மாவோட வீடா என்ற சந்தேகம் பிரபல நடிகருக்கு ஏற்பட அவர் தன்னுடைய சந்தேகத்தை தீர்த்து கொள்ள ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Actor Sathish Tweet About BB : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் வனிதாவின் அராஜகம் தான் யாராலும் தாங்கி கொள்ள முடியவில்லை.

யாரை பேச விடாமல் தான் எடுப்பதே இறுதி முடிவு என நாளுக்கு நாளுக்கு மக்களிடம் வெறுப்பை மட்டுமே சம்பாதித்து வருகிறார்.

A பட நடிகை கலாச்சாரம் பற்றி பேசலாமா? மதுமிதாவை விளாசும் ரசிகர்கள் – புகைப்படங்கள் உள்ளே.!

நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ள அவரை எப்படியாவது வெளியேற்றி விட வேண்டும் என நெட்டிசன்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்க வனிதா இல்லாட்டி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கண்டெண்ட்டே இருக்காது என பிக் பாஸ் அவரை காப்பாற்ற முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகரான சதிஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது பிக் பாஸ் வீடா? இல்ல யாரோட வீடுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க என ட்வீட் செய்துள்ளார். அவர் மறைமுகமாக வனிதாவை தான் கூறுகிறார் என்பது அனைவருக்குமே தெரியும்.

சதீஷின் இந்த டீவீட்டிற்கு ரசிகர்களும் அவர்களின் ரியாக்ஷன்களை வெளிப்படுத்தி வனிதாவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.