நடிகர் சரத் பாபு உடல்நல குறைபாடு காரணமாக காலமானார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சரத்பாபு. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் நடித்து வந்த இவர் ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே உடல் நல குறைபாட்டால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சரத் பாபு தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பலரும் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.