Actor santhanam wishes to CM

நடிகர் சந்தானம் முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Actor santhanam wishes to CM : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சந்தானம். இவர் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படியான நிலையில் சமீபத்தில் நடந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சரானார்.

திரையுலக பிரபலங்கள் பலரும், முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது காமெடி நடிகர் சந்தானமும் நேரில் சென்று வாழ்த்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.