முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக வெளியான தகவலுக்கு பதறிப்போய் விளக்கம் அளித்துள்ளார் இளம் நடிகர் ஒருவர்.

Actor Ram Potheni About Murugadoss : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தவர் முருகதாஸ். கஜினி, கத்தி துப்பாக்கி, ரமணா, தீனா என தரமான படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் தடம் பதித்தார்.

ஆனால் சமீபகாலமாக இவர் இயக்கி வரும் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி அடைந்தாலும் விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை. ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் பாஷா ரேஞ்சுக்கு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாபா ரேஞ்சுக்கு கூட வரவில்லை.

என்னது முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறேனா?? பதறிப்போய் விளக்கமளித்த இளம் நடிகர் - அப்ப இதுவும் பொய்யா??

இவர் தெலுங்கில் இயக்கிய ஸ்பைடர் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இந்தியில் இயக்கிய அகிரா திரைப்படமும் தோல்வி. இதனால் கதைக்கேட்டு திருப்தி அடைந்த பின்னரே முன்னணி நடிகர்கள் கூட நடிக்க ஒப்புக் கொள்ளும் அளவிற்கு காலம் மாறிப் போயுள்ளது. இளைய தளபதி விஜய்க்கு ஒரு கதையைக் கூட திருப்தி அடையாத விஜய் நடிக்க மறுத்துவிட்டார்.

இதனால் முருகதாஸ் தெலுங்கு சினிமாவில் இளம் நடிகராக வலம் வரும் ராம் பொத்தேனியை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் கடந்த சில தினங்களாக வலம் வரத்தொடங்கியது. இந்த நிலையில் தற்போது ராம் பொத்தேனி அளித்த பேட்டி ஒன்றில் நான் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறேன். தற்போது இந்த படத்தில் மட்டும்தான் முழு கவனம் செலுத்தி வருகிறேன். முருகதாஸ் படத்தில் நடிப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என கூறியுள்ளார்.