நடிகர் ரஜினிகாந்த் AVM ஹெரிடேஜ் மியூசியத்தை சுற்றிப் பார்த்துள்ளார்.

கோலிவுட் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக என்றென்றும் திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் மாபெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து லால் சலாம் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வரும் நடிகர் ரஜினி அடுத்ததாக தலைவர் 170 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், AVM சரவணன் மற்றும் எம் எஸ் குகன் ஆகியோருடன் இணைந்து AVM ஹெரிடேஜ் மியூசியத்தை நேற்றைய தினம் சுற்றிப் பார்த்துள்ளார். அதில் படங்களின் படப்பிடிப்பில் பயன்படுத்திய பழைய வகை கேமராக்கள், பைக்குகள் மற்றும் கார்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் அதில் 1983இல் வெளியான பாயும் புலி படத்தில் ரஜினி பயன்படுத்திய சுசுகி ஆர்வி 90 பைக்கும் இடம் பெற்றுள்ளது. அதனை மகிழ்ச்சியுடன் ரசித்து சுற்றிப் பார்த்த ரஜினியின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.