நடிகர் ரஜினிகாந்த் தனது சகோதரரின் பிறந்த நாளை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய தருணத்தை பதிவாக பகிர்ந்து இருக்கிறார்.

இந்திய திரை உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து என்றென்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது சகோதரரின் பிறந்த நாளை கொண்டாடிய மகிழ்ச்சி தருணத்தை புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர், எனது சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டின் 80வது பிறந்தநாளையும், அவரது மகன் ராமகிருஷ்ணாவின் 60வது பிறந்தநாளையும் ஒரே நாளில் எனது குடும்பத்தினருடன் கொண்டாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன், என்னை ஆளாக்கிய இந்த தங்க இதயத்திற்கு தங்க மழை பொழிவதை பாக்கியமாக உணருகிறேன் என்று பதிவின் மூலம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். இதற்கு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.