Actor Question to Rathnakumar
நீங்க விஜயை சந்திக்க நானும் ஒரு காரணம் ஆனா மாஸ்டர் இசை வெளியீட்டு விழா என்னை பத்தி பேசவே இல்லை என பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Actor Question to Rathnakumar : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்க அவருடன் இணைந்து ஆடை, மேயாத மான் படங்களின் இயக்குனர் ஏ ரத்னகுமார் திரைக்கதை வசனம் அமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசும் போது ஏ. ரத்னகுமார் பத்திரிகையாளரும் நடிகருமான கயல் தேவராஜ் அவர்களின் பெயரை கூற மறந்துள்ளார்.

என் கூட நடிக்க ஓகேவானு கேட்ட விஜய்.. நாளே வார்த்தையில் ஆப் செய்த விஜய் சேதுபதி – அப்படி என்ன சொல்லியிருக்கார் பாருங்க

இந்நிலையில் இது குறித்து கயல் தேவராஜ் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உங்கள் சிறு வயதில் ப்ரியமுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜயை சந்திக்க நானும் ஒரு காரணமாக இருந்தேன் என்பது உங்களுக்கு நினைவு இருக்கும் என நம்புகிறேன். இசை வெளியீட்டு விழாவில் அது பற்றி நீங்கள் குறிப்பிட்டு இருக்கலாம் என கூறியுள்ளார்.

இதற்கு ரத்னகுமார் ஆமாம் சார். எனக்கு நியாபகம் இருக்கிறது. மறக்க முடியாத நினைவுகளுக்கு நன்றி என பதில் அளித்துள்ளார்.

Rathna

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.