திருமணத்திற்கு ஓகே சொல்லி விட்டதாக நடிகர் பிரசாந்த் கூறியிருக்கிறார்.
90ஸ்களின் ஃபேவரைட் நடிகராக இருப்பவர் பிரசாந்த். இவரது நடிப்பில் அந்தகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை இவரது தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார்.
சிம்ரன், பிரியா ஆனந்த்,கார்த்திக் போன்ற பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இது மட்டுமல்லாமல் இந்த படம் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் திடீரென ஒன்பதாம் தேதி வெளியாக போவதாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்தப் படத்திற்கான ப்ரமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரசாந்திடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் பதில் அளித்துள்ளார்.
அதாவது “திருமணம் நிச்சயம் நடக்கும் நான் ஓகே சொல்லிவிட்டு ரெடியாகத்தான் இருக்கிறேன்” என்னை புரிந்து கொள்ளும்படி பெண் கிடைத்தால் போதும் என்று கூறியுள்ளார்.
பிரசாந்தின் இந்த பதில் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.