கோட் படம் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்துள்ளார் பிரசாந்த்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் சுரேஷ் , கல்பாத்தி எஸ் கணேஷ்,ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கோட் 25 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, யோகி பாபு, யுகேந்திரன், பார்வதி நாயர்,VTV கணேஷ் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அந்த வகையில் நடிகர் பிரசாந்த் லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்து உள்ளார். அதில், கோட் படம் கிட்டத்தட்ட 179 நிமிடங்கள் அதாவது மூன்று மணி நேரம் ஓடும் என்பதையும், வெங்கட் பிரபுவின் திரைக்கதை மிகவும் அருமையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருக்கும் எந்த விதத்திலும் கதை சலிப்பை ஏற்படுத்தாது என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.