Actor Ponnambalam Tried to Suicide
Actor Ponnambalam Tried to Suicide

உடல்நலக்குறைவால் கிட்டத்தட்ட 20 முறைக்கு மேல் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக நடிகர் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

Actor Ponnambalam Tried to Suicide : தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்து பிரபலமானவர் பொன்னம்பலம். இந்த படத்திற்கு பிறகு அவர் ரஜினி, கமல் என பல நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ளார்.

மேலும் இதன் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே தன்னுடைய உடல் நிலை குறித்து பலமுறை பேசியிருப்பார்.

தனக்கு கால்களில் உணர்வே இல்லை எனவும் கூறி இருப்பார். சமீபத்தில் இவர் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

24 மணி நேரத்தில் விஸ்வாசம் மோஷன் போஸ்டர் படைத்த சாதனை – அதிரும் கோலிவுட் வட்டாரம்.!

மேலும் இவரது சிகிச்சைக்கு கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் உதவியுள்ளனர். தற்போது ஓரளவு குணம் அடைந்து வீடு திரும்பியுள்ள பொன்னம்பலம் இணையதள பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் உடல்நலக்குறைவு காரணமாக 20 தடவைக்கு மேல் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு சரத்குமார், கமல், ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் உதவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் நிறைய படங்களில் நடித்தேன் நிறைய சம்பாதித்தேன் ஆனால் எதையும் சேர்த்து வைக்கவில்லை எனக் கூறியுள்ளார். தன்னுடன் நடித்த நடிகர்கள் தனக்கு உதவினால் என் மருத்துவ செலவிற்கு பேருதவியாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

நடிகர் பொன்னம்பலம் 20 தடவைக்கு மேல் தற்கொலைக்கு முயன்றதாக கூறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.