Actor Ponnambalam Admitted in Hospital
Actor Ponnambalam Admitted in Hospital

நடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உலக நாயகன் கமலஹாசன் உதவி செய்துள்ளார்.

Actor Ponnambalam Admitted in Hospital : ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் பொன்னம்பலம். இவர் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.

தற்போது இவர் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிகிச்சைக்கு திரு கமல்ஹாசன் உதவி வருகிறார். மற்றும் பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகிறார்.

சினிமாவில் இருந்து விலக முடிவு எடுத்த ரஜினி? இதுதான் கடைசி படமா? – வெளியான ஷாக் தகவல்

இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவரின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதனை அறிந்த ரசிகர்கள் பொன்னம்பலம் அவர்கள் பூரண குணமடைந்து திரும்ப வேண்டும் என கடவுளைப் பிராத்தித்து வருகின்றனர்.