இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபனிடம் நெட்டிசன் தரக்குறைவாக பேசிய விவகாரம் சமூக வலைத்தளங்களில் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

Actor Parthiban replied to rajini fan in twitter – நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது வித்தியாசமான வசனம், கதை, திரைக்கதை மூலம் ரசிகர்களை ஈர்த்தவர். எதையும் வித்தியாசமாக செய்பவர் மற்றும் பேசுபவர் என பெயர் எடுத்தவர். இவர் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படம் பற்றிய அறிவிப்புகளை அவர் தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். மேலும் டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் பார்த்திபன்.

விஜய் கூட சேர்ந்து நடிக்கணும்னு எனக்கும் ரொம்ப நாள் ஆசை – பார்த்திபன் ஓபன் டாக்.!

இந்நிலையில், நேற்று ஒரு நெட்டிசன் ‘டேய் அசுரன் டிரெய்லர் பாத்தியாடா?’ என ஒருமையிலும், தரக்குறைவாகவும் பார்த்திபனிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பொறுமையாக பதிலளித்த பார்த்திபன் ‘பார்த்தேங்க சார்…அசுரத்தனமா இருந்தது. Super performance by mr danush இயக்குனருக்கு 6மணிக்கே Msg அனுப்புனேங்க சார்! மற்றும், ‘a journey of fakir’ பாத்துட்டு (துட்டு குடுத்து) நான் கை தட்னது ஊருக்கே கேட்டுது!’ என டிவிட் செய்துள்ளார்.

இதையடுத்து அந்த நபர் ரஜினி ரசிகராகவே இருக்க முடியாது. உண்மையான ரஜினி ரசிகர் இப்படி மரியாதை இல்லாமல் பேசவே மாட்டார் என பலரும் அவருக்கு கண்டனம் தெரிவிக்க அந்த நபர் தனது டிவிட்டர் பக்கத்தை அழித்து விட்டு ஓடி விட்டார்.