நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாகார்ஜுனா. இவரது மகன் நாக சைதன்யா தெலுங்கு சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வருகிறார்.
இவர் சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் நான்கு ஆண்டுகளில் விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து பிரிந்தனர். சமந்தா அவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நாக சைதன்யாவிற்கும் சோபிதா துலிபாலாவிற்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதனை சைதன்யாவின் அப்பா நாகார்ஜுனா டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
தற்போது இவரின் சொத்து மதிப்பு சுமார் 170 கோடி என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது மட்டும் இல்லாமல் இவரது அப்பா நாகர்ஜுனா இந்தியாவிலேயே 3200 கோடி சொத்துக்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் என்று பேசப்படுகிறது.
இந்தத் தகவல் இணையத்தில் வெளியாகி தீயாகபரவி வருகிறது.