வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மகத்.
Actor Mahat Workout : தமிழ்சினிமாவில் முன்னணி நடிகரான சிம்புவின் நெருங்கிய நண்பர் மகத்.
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தமிழில் அஜித்துடன் மங்காத்தா மற்றும் விஜய்யுடன் ஜில்லா ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் சிம்புவுடன் இணைந்து வந்தா ராஜாவாகத்தான் வருவேன் என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார்.
மேலும் தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். கடந்த வருடம் தான் இவருக்கும் இவருடைய காதலி பிராச்சிக்கும் திருமணம் நடந்து முடிந்தது.
தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் மகத் வெறித்தனமாக ஒரக் அவுட் செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் முயற்சி செய்தால் முடியாதது என்று எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மகத் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.