Actor Madhavan
மாதவனின் முதல் பட இயக்கத்தில் நடிக்க இருக்கும் தமிழ் பிரபல நடிகர்.

Actor Madhavan : நடிகர் மாதவன் மணிரத்னம் அவர்களின் அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் பெண்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். அவரின் சிரிப்பிற்கு என்றே தனி கும்பல் சுத்திக் கொண்டு இருக்கிறது.

அது மட்டும் இன்றி பொதுவாக அவரின் வசீகரமான பேச்சு மற்றும் சிரிப்பு அவருக்கு மேலும் கூடுதல் பலமாக அமைந்தது.

அதனால், அவர் தமிழ் சினிமா முதல் இந்தி சினிமா வரை இந்திய மொழிகளில் நடித்துவிட்டார்.

யாராலயும் தொடவே முடியாது, இது வேற லெவல் – தளபதி 63 குறித்து கதிர் பேட்டி.!

தற்போது பட இயக்கத்தில் இறங்கியுள்ளார். நாராயணன் எழுதிய “Ready to fire: How India and I survived ISRO case” என்ற புத்தகத்தை மைய்யமாக கொண்டு இந்த படம் தயாராகிறது.

மேலும் இந்த படத்தில் மூன்று வேடங்களில் மாதவன் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்த ஒன்று, இப்பொழுது மேலும் ஒரு பிரபல நடிகர் இந்த படத்தில் இணைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த நடிகர் சூர்யா தான். மாதவன் சூர்யாவிடம் நடந்த கதையை சூர்யாவிடம் கூறுவது போல கதை அமைந்து உள்ளதாம்.

அதே சமயம் 13 ஆண்டுகளுக்கு பிறகு மாதவன் சிம்பரன் ஜோடி இந்த படத்தில் இணையயுள்ளது. அத்துடன் இந்த படம் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாகவும் தெரியவந்து உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.