Actor Livingston in Sembaruthi Serial

செம்பருத்தி சீரியலில் அடையாளம் தெரியாத கெட்டப்பில் பிரபல நடிகர் ஒருவர் இணைய உள்ளார்.

Actor Livingston in Sembaruthi Serial : தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக இருந்து வருவது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் செம்பருத்தி. கார்த்திக்ராஜ் நாயகனாக நடிக்க ஷபானா நாயகியாக நடித்து வரும் இந்த சீரியல் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. டிஆர்பி-யில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருந்தது.

திரைப்படங்களில் நடிப்பதற்காக கார்த்திக்ராஜ் இந்த சீரியலில் இருந்து விலகிக் கொள்ள அவருக்கு பதிலாக பிரபல தொகுப்பாளர் அக்னி நடித்து வருகிறார். இருப்பினும் மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஏற்கனவே இந்த சீரியலில் பிரபல நடிகர் மனோ பாலா நடித்து வரும் நிலையில் தற்போது லிவிங்ஸ்டனும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஆள் அடையாளம் தெரியாத வித்தியாசமான கெட்டப்பில் இவர் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.