Actor Kumarimuthu Daughter Photo
Actor Kumarimuthu Daughter Photo

நடிகர் குமரிமுத்துவின் மகளுடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Kumarimuthu Daughter Photo : தமிழ் சினிமாவில் தன்னுடைய குரலால் உச்சம் தொட்ட நடிகர்கள் பலர் உண்டு. தற்போது அர்ஜுன் தாஸ் என்ற நடிகர் தன்னுடைய குரலால் உச்சத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.

அப்படித்தான் தன்னுடைய குரலாலும் வித்யாசமான சிரிப்பாலும் எதார்த்தமான நடிப்பாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் குமரிமுத்து.

இவர் தற்போது இவ்வுலகில் இல்லை என்றாலும் இவருடைய நகைச்சுவையும் எதார்த்தமான நடிப்பும் இன்றும் அப்படியே மக்களின் மனதில் மாறாமல் இடம்பெற்றுள்ளது.

அஜித்துக்கு கேக் ஊட்டும் விஜய்.. மொத்த பிரபலங்களும் ஒன்று சேர்ந்து கொண்டாட்டம் – வைரல் ஆகுது மரண மாஸ் கார்ட்டூன் புகைப்படம்.!

தற்போது இவருடைய மகள் எலிசபெத் என்பவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அச்சு அசலாக அப்படியே குமரி முத்துவின் சிரிப்பை கொண்டுள்ளார் எலிசபெத். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குமரிமுத்துவின் மகளா இது என வியப்புடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மேலும் இவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். தன்னுடைய வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி இனி சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.