YouTube video

Actor Kavin‘s LIFT Movie Massive Update – Gayathri Reddy Revealed

Sonia Agarwal Second Marriage : தமிழ் சினிமாவில் செவன் ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மதுர, கோயில், சதுரங்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார் சோனியா அகர்வால்.

இவர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.அதன் பின்னர் செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் சோனியா அகர்வால் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் திருமணம் நடப்பது போன்ற சில வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்து குழப்பமான ரசிகர்கள் சோனியா அகர்வாலுக்கு திருமணமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் இது குறித்து அவர் எதுவும் வாய் திறக்கவில்லை. மேலும் இது வெப் சீரிஸாக இருக்கலாம் அதற்காக இப்படி ப்ரமோட் செய்ய தொடங்கி இருக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.