பிக்பாஸ் வீட்டிலிருந்து கவின் வெளியேறிவிட்டதாக செய்திகள் கசிந்துள்ளது.

Actor Kavin walked out the biggboss show – பிக்பாஸ் வீட்டில் காதல் மன்னனாக வலம் வருபவர் கவின். அபிராமி, சாக்‌ஷி என தொடங்கி தற்போது லாஸ்லியாவுக்கு காதல் வலை வீசி வருகிறார். ஆனால், லாஸ்லியாவை அவரின் தந்தை கண்டிக்கும் புரமோ வீடியோ இன்று வெளியானது. எனவே, கவினிடமிருந்து லாஸ்லியா விலகி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பா விட்ட ரைடு… எப்டி இருந்த புள்ள இப்படி ஆகிப்போச்சே… வைரலாகும் லாஸ்லியா புகைப்படம்

இந்நிலையில், ஃப்ரீஸ் டாஸ்கில் உள்ளே வரும் சாண்டியின் மனைவி கவினிடம் அவர் தாய் மற்று நெருங்கிய உறவினர்களுக்கு நீதிமன்றம் சிறைதண்டனை வழங்கியதை கூறிவிட்டதாகவும், அதனால் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு வெளியான அன்றே கவின் வெளியேறியதாக செய்திகள் வெளியானது. ஆனால், அவர் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வருகிறார். எனவே இந்த செய்தியும் வதந்தியாக இருக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. இந்த வாரம் வெளியேறுபவர் பட்டியலில் கவின், ஷெரின், சாண்டி, தர்ஷன் மற்றும் வனிதா ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.