
டாடா படம் ஹிட்டானதால் தனது சம்பளத்தை உயர்த்தி தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் கவின்.
தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் கவின்.

இந்த சீரியலைத் தொடர்ந்து மேலும் சில சீரியல்களில் நடித்த இவர் நட்புனா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் வெள்ளி திரையில் நாயகனாக அறிமுகமானார். பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
மேலும் லிப்ட் என்ற படத்தில் நடித்து வெற்றி கொடுத்த கவின் அதனைத் தொடர்ந்து டாடா என்ற படத்தில் நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பற்றி வெற்றி பெற்றது.

இதன் காரணமாக இதுவரை 1 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த கவின் தற்போதைய தன்னுடைய சம்பளத்தை இரண்டு கோடியாக உயர்த்தி உள்ளார். இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.