Actor Karunakaran Ask Equal Salary to Vijay
Actor Karunakaran Ask Equal Salary to Vijay

விஜய்க்கு தர சம்பளத்தை எனக்கு கொடுங்க நான் உதவுகிறேன் என காமெடி நடிகர் கருணாகரன் பெயரில் பதிவாகியுள்ள போலி ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actor Karunakaran Ask Equal Salary to Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். கரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவிற்கு பிரபலங்கள் பலரும் நிதி அளித்து வந்த நிலையில் விஜய் இதுவரை அமைதி காத்து வந்த நிலையில் சமீபத்தில் ரூபாய் 1.30 கோடி வழங்கினார்.

போச்சா போச்சா.. கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வர மாட்டேன் – நடிகர் வடிவேலு வெளியிட்ட வீடியோ.!

அதுமட்டுமல்லாமல் ரசிகர் மன்றம் மூலமாக ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும் வறுமையில் வாடும் ரசிகர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக ரூபாய் ஐந்தாயிரம் செலுத்தினார்.

இந்த நிலையில் இது குறித்து பத்திரிகை ஒன்று பதிவிட இதனைப் பார்த்த நடிகர் கருணாகரன் எனக்கும் விஜய்க்கு கொடுக்கிற சம்பளத்தை கொடுங்க என பதில் அளித்திரப்பது போல பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

ஆனால் கருணாகரன் தற்போது எந்த ஒரு சமூக வலைதளப் பக்கத்தில் இல்லை. இப்படியான நிலையில் அவருடைய பெயரில் உலா வரும் இந்த பதிவு அவருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கும் விஜய் ரசிகர்களிடையே பிரச்சினைகள் ஏற்பட்டு இருந்தது உண்மை தான். இதனை சிலர் பயன்படுத்திக்கொண்டு கருணாகரன் பெயரில் இப்படி ஒரு போலி பதிவை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

உண்மை என்ன என்பதை அறியாமல் ரசிகர்கள் இப்படி செய்வது சம்பந்தப்பட்ட நடிகரை வருத்தம் அடையச் செய்யும் என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். ‌

Actor Karunakaran Ask Equal Salary to Vijay
Actor Karunakaran Ask Equal Salary to Vijay