Valimai First Look Update
Valimai First Look Update

எதிர்பாராத நேரத்தில் வலிமை படம் பற்றிய அதிகாரபூர்வ அப்டேட் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது.

Actor Karthikeya Tweet About Valimai Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

ஸ்ரீதேவியின் கணவரும் பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூர் இந்த படத்தை தயாரிக்க சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய எச் வினோத் இந்த படத்தை பக்கா ஆக்சன் திரைப்படமாக இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் தல அஜித் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான ஹீமா குரோஷி நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் வில்லனாக தெலுங்கு சினிமாவில் வெளியான ஆர் எக்ஸ் 100 படத்தின் நாயகன் கார்த்திகேயா நடிப்பதாக கூறப்பட்டு வந்தது.

தற்போது நடிகர் கார்த்திகேயா இதனை உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் தல அஜித் சாருக்கு ஸ்பெஷல் நன்றி என தெரிவித்துள்ளார்.

Valimai Villian

மேலும் ரசிகர்களை கொஞ்சம் பொறுமையா இருங்க நீங்க எதிர்பார்த்ததை விட செம மிரட்டலான அப்டேட் ஒன்றும் வெளியாகப் போகிறது என தெரிவித்துள்ளார்.

அஜித்துக்கு தம்பியான இளம் நடிகர்.. சூடு பறக்கும் வலிமை அப்டேட் – அது யார் தெரியுமா??

ஒரே ட்விட்டர் பதிவில் தான் வலிமையில் நடிப்பதை உறுதிசெய்த கார்த்திகேயா விரைவில் செம மாஸான அப்டேட் ஒன்று வெளியாக போவதையும் தெரிவித்துள்ளார்.

இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ரசிகர்களின் மிரட்டலான கமெண்ட்ஸ்