kaithi

கைதி திரைப்படம் பற்றி நடிகர் கார்த்தி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

மாநகரம் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘கைதி’. இப்படம் வருகிற 25ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தில் சிறையிலிருந்து தப்பி வரும் கைதியாக நடித்துள்ள கார்த்தி, ரவுடிகளுடன் மோதும் அட்டகாசமான சண்டைக்காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

karthi

இந்நிலையில், சமீபத்தில் கார்த்திக் தனது ரசிகர் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இறங்கி அடிச்சு ரொம்ப நாளாச்சு… 10 வருஷம் கழிச்சு இன்னொரு பருத்தி வீரன ‘கைதி’ படத்துல பாக்கப் போறீங்க’ என தெரிவித்தார்.

இதை அவர் கூறியதும் அவரின் கைதட்டி உற்சாகமாக வரவேற்றினர். அதன்பின் அவர்கள் கார்த்தியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here